வானத்தில் வட்டமிட்டபடியிருக்கும் பருந்துகள் இறக்கைகளை அசைக்காமல் காற்றிலாடியபடி கீழறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் நீருக்குள் இருக்கும் மீனை கால்களால் கவ்வித் தூக்கி வேட்டையாடும் காட்சியைக் காணக் கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்களே!
அப்படி நீரில் மறைந்திருக்கும் மீனை பருந்து ஒன்று அநாயசமாக வேட்டையாடும் வியத்தகு அண்மைக்காட்சி ஒன்று இணைவாசிகளை வாய் பிளக்கச் செய்து வருகிறது. அந்தப் பருந்து வேட்டை கிட்டத்தட்ட 124 மில்லயன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது. மார்க் ஸ்மித் என்ற புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர், இந்த அசாத்தியமான காட்சியை படம் பிடித்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் அந்த வீடியோ இணையவாசிகளை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வீடியோவில், பெருங்கடலுக்கு மேலே காற்றில் மிதந்தபடி நீரினை நோக்கி இறங்கி வரும் பருந்து ஒன்று அலட்டல் இல்லாமல் கிட்டத்தட்ட நீருக்குள் மூழ்கி மீன் ஒன்றை கால்களால் கவ்விப் பிடித்து, அப்படியே மேலெழுந்து மீண்டும் காற்றில் பறந்த படியே மீனை கால்களில் இருந்து அலகுக்கு மாற்றி, அலகில் குறுக்காக இருக்கும் மீனை நேராக கொண்டு வந்து மெல்ல விழுங்கி ரசித்து ருசிக்கும் காட்சி மிக நெருக்கமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ 124 மில்லியன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது. இதற்கு 44,25,108 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கருத்திட்டு மார்க் ஸ்மித்தை பாராட்டியுள்ளனர். பயனர் ஒருவர், "இவர் என்னை பேசமுடியாமல் செய்துவிட்டார் என்பதைத் தாண்டி வேறன்ன சொல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "இந்த அசாத்தியமான காட்சியை உங்களால் படம்பிடிக்க முடிந்திருக்கிறது என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.
» உயரமான கட்டிட கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிய பூனையை போராடி மீட்ட ப்ளூ கிராஸ் - வைரல் வீடியோ
இன்னுமொரு பயனர், "பறந்து கொண்டிருக்கும் போதை கால்களில் துடித்துக்கொண்டிருக்கும் மீனை அலகுக்கு மாற்றி சாப்பிடுவதற்கு எவ்வளவு திறமை வேண்டும் என்று உங்களால் நினைத்து பாருங்கள். இந்தப் பறவை வானில் வட்டமிட்டால் எப்படி இருக்கும் என்று உங்களால் எண்ணிபார்க்க முடிகிறதா?" என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், "இந்தப் பறவை வெற்றியின் போது வெறித்தனமாக தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார். இன்னுமொருவர், "இதுதான் பறக்கும் போது சாப்பிடுவது என்று அழைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டிருக்கும் மார்க் ஸ்மித், தன்னை ஒரு புகைப்படக்காரர், வீடியோகிராப்பர் மற்றும் கதை சொல்லி என்று சொல்லிக்கொள்கிறார்.