திருப்பத்தூர் / ராணிப்பேட்டை: திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காலியாக உள்ள சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்க ளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்கள் சிவசௌந்திரவல்லி (திருப்பத்தூர்), சந்திரகலா (ராணிப்பேட்டை) ஆகியோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள், வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில்,"திருப்பத்தூர் மாவட்டத் தில் 140 சமையல் உதவியாளர் பணியிடங்களும், ராணிப் பேட்டை மாவட்டத்தில் 211 சமையல் உதவியாளர் பணியிடங்களும் நேரடியாக நியமனம் மனம் செய்யப் பட உள்ளன. வட்டாரம், நகராட்சி வாரியாக நேரடி நியம னம் செய்யப்படவுள்ளது. எண்ணிக்கை இன சுழற்சி விவரம். மாதிரி விண்ணப்பப் படிவம் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள். நக ராட்சி அலுவலகங்கள். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் வாயிலாகப் பதி விறக்கம் செய்து கொள்ளலாம்.
சமையல் உதவியாளர் பணி யிடம் தொகுப்பூதிய அடிப்படை யில் பணி நியமனம் செய்யப் படுவோர்களுக்கு முதலில் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டுக் கால பணிக்குப்பிறகுசிறப்பு காலமுறை ஊதியமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை வழங்கப்படும். 21 வயது முதல் 40 வய துள்ள பெண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி ஆகும். தமிழில் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
நியமனம் கோரும் மையத் துக்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தொலைவு 3 கி.மீட்டருக்குள் இருக்க வேண்டும். (இதில். ஊராட்சி-குக்கிராமம், வருவாய் கிராமம் போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை). மாற்றுத்திறனாளி களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. விதவைகள், கணவரால் கைவிடப் பட்டோர், ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவல கம், நகராட்சி அலுவலகத்தில் ஏப். 15-ம் தேதியான இன்று தொடங்கி மே.2-ம் தேதி மாலை 5.45 மணிக்குள்ளாக அளிக்கலாம். அதன்பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
பூர்த்தி செய்த விண்ணப்பத் துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ். 10ம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று. ஆதார் அட்டை. சாதிச் சான்று. விதவை. கணவரால் கைவிடப்பட்டோர், ஆதர வற்ற பெண்களாக இருந்தால் அதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும். அஞ்சல் துறையின்
மூலம் விண்ணப்பங்கள் அனுப் பப்படும்போது ஏற்படும் கால தாமதங்களுக்கு துறை பொறுப் பேற்காது. எனவே, தகுதியுள்ள விண்ணப் பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும். வேறு அலுவலகங்களிலோ, பிற அலுவலர்களிடமோ, மின்னஞ் சல். இணையவழி மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங் கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
உரியச் சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையை ரத்து செய்வதற்கும். திரும்பப் பெறுவதற்கும் அல்லது திருத்துவதற்கும் கெடு தேதியை நீடிப்பதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரம் உண்டு எனத் தெரிவித்துள்ளனர்.