கள்ளக்குறிச்சி: சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே புதிய ரயில் பாதையில் நாளை மறுதினம் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகின்றன.
சின்னசேலம் ரயில் நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த புதிய அகல ரயில் பாதையில் சின்னசேலம் ரயில் நிலையத்தில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவுக்கு பொற்படாக் குறிச்சி வரை பாதை பணிகள் முடிந்துள்ளது. இந்தப் பாதையில் நாளை மறுதினம் (ஏப். 16) ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்தப் பாதையில் 16ம் தேதி பிற்பகல் 12 முதல் 2 மணி ரயில் சோதனை நடத்தும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இருப்பாதகவும், அப்பகுதியில் வசிப்போர் ரயில் பாதை பகுதியில் நடமாட வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.