சென்னை: இனி நான் சுதந்திரமாக பேச ஆரம்பிப்பேன். இதுவரை எனக்கு பொறுப்பு எனும் கட்டுப்பாடு இருந்தது. இனி நான் அண்ணாமலையாக அதிரடியாக அரசியல் பேசுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அண்ணாமலை பேசுகையில், “அமமுக பொதுச்செயலாளர் நேற்று மருத்துவமனைக்கு செல்வதாக 2 நாட்களுக்கு முன்பாகவே கூறிவிட்டார். டிடிவி தினகரன் அண்ணாவின் இதயம் நல்ல இதயம் என்று அனைவருக்கும் தெரியும். அதனை மருத்துவர்களே சான்றிதழ் கொடுத்து உறுதி செய்துள்ளனர். நீங்கள் அற்புதமான மனிதர் என்று பழகி பார்த்த அனைவருக்கும் தெரியும். நிச்சயம் நீங்கள் நினைக்கும் மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இனி நான் சுதந்திரமாக பேச ஆரம்பிப்பேன். இதுவரை எனக்கு பொறுப்பு எனும் கட்டுப்பாடு இருந்தது. இனி நான் அண்ணாமலையாக அதிரடியாக அரசியல் பேசுவேன். ஒரு அரசியல்வாதிக்கு அடித்து ஆடவேண்டிய பாக்ஸிங் கலை தேவைப்படுகிறது. அதனால் பேச்சு ஸ்டைலை இனி மாற்றிவிடுவேன். பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் இனி இருக்கிறார். கூட்டணி பற்றி நீங்கள் ஒன்று சொன்னீர்களே என்றால் அவரை கைகாட்டி விடுவேன். அவர் தடுத்து ஆடும் ஆட்டத்தை பார்ப்பார். இனி எனக்கு சிக்ஸ் அடிப்பதுதான் வேலை” எனத் தெரிவித்தார்
» ‘2026ல் தவெக வெற்றிபெறும்; திமுக, பாஜகவை மக்கள் தூக்கியெறிவார்கள்’ - விஜய் பரபரப்பு அறிக்கை