2-ம் நாளாக தொழில்நுட்பக் கோளாறு: திருச்சியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதம்

By KU BUREAU

திருச்சி: திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தம்மாம் நகரத்துக்கு நேற்று காலை 6.05 மணிக்கு 150-க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப் பட்டது. பின்னர், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு பகல் 11.40 மணிக்கு புறப்பட்டது.

இதேபோல, ஏப்.4ம் தேதி திருச்சியில் இருந்து துபாய் புறப்பட வேண்டிய விமானம், தொழில்நுட்பக் கோளாறால் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

முன்னதாக, நேற்று முன்தினம் காலை 4.30 மணிக்கு 180 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்படத் தயராக இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு காலை 8 மணிக்குப் புறப்பட்டது.

இவ்வாறு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அடிக்கடி பழுதாவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தொழில்நுட்பக் கோளாறு இல்லாத விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE