கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் ஹரிகிருஷ்ணன் (22). இவர் நேற்று தனது நண்பர் ராம்குமாருடன் சுருளிப்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கின் முகப்பு விளக்குப் பகுதியில் இருந்து பாம்பு மேலே வந்தது. வண்டியை நிறுத்துவதற்குள் பாம்பு அவரை கடித்தது. கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ராயப்பன்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.