‘மீண்டும் பாசமலர்’ - சிங்கம்புணரி அருகே தம்பி உயிரிழந்த அதிர்ச்சியில் அக்கா மரணம்

By KU BUREAU

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தம்பி உயிரிழந்த அதிர்ச்சியில் அக்கா மரணமடைந்தார். பாசமாக இருந்த சகோதர, சகோதரி இருவரும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை சாமியாடிகளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மருதன் (49). தனியாரிடம் வேலை செய்து வந்தார். இவரது அக்கா புஷ்பம் (59) நாடார்வேங்கைப்பட்டியில் வசித்து வந்தார். இருவரும் பாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மருதன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தம்பி இறந்ததை அறிந்து புஷ்பம் அங்கு வந்தார். தம்பி உடலை பார்த்து கதறி அழுத புஷ்பத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார்.

பாசமாக இருந்து வந்த சகோதர, சகோதரி இருவரும் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம், உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இருவரது உடல்களும் அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டன.

புஷ்பத்துக்கு கணவர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், ஒரு மகன் மட்டுமே உள்ளார். அதேபோல், மருதனுக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE