விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது: முக்கியத்துவம் என்ன?

By KU BUREAU

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது.

தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளிக்க கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கினார். அவர் திமுக, பாஜகவை கடுமையாக விமர்சிப்பதுடன், 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பேன் எனவும் கூறிவருகிறார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE