சென்னை: எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படத்திற்கு எதிராக சீமான், ராமதாஸ், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர். மேலும், இப்படத்தை தடை செய்ய விவசாயிகளும் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர்.
இந்த சூழலில் ‘எம்புரான்’ சர்ச்சை இன்றைய சட்டப்பேரவையிலும் எதிரொலித்துள்ளது. இந்த சர்ச்சை குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ முல்லை பெரியாறு குறித்த அந்தக் காட்சி சென்சாரில் கட் செய்யவில்லை. படம் வெளியே வந்த பிறகு இந்த செய்தி வெளியே வந்து. அதன் பிறகு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பின்பு தான் தான் அந்தக் காட்சி நீக்கப்பட்டுள்ளது” என்றார். இதுகுறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “நான் அந்த படத்தை பார்க்கவில்லை, அந்த படத்தை பார்த்தவர்கள் கூறியதை கேட்டதும் பயமும் கோபமும் வருகிறது. தேவையற்ற செயல் அது. அந்த திரைப்படத்தால் வேறு மாநிலங்களில் கூட பிரச்சினை வரலாம்” என்றார்.
இதுபற்றி எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில், “எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் என காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த படம் தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
» ‘நீட்டே இருக்காது என சினிமா வசனம் பேசிய உதயநிதி’ - சேலம் மாணவி தற்கொலைக்கு இபிஎஸ் ஆதங்கம்