‘பொதுத்தேர்வில் பாடப்புத்தகங்களை பார்த்து எழுதுமாறு ஆசிரியர்கள் கூறினார்கள்’ - புதுச்சேரியில் பகீர் புகார்

By KU BUREAU

புதுச்சேரி: தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர் பாவாணன் தலைமையில் ஏராளமானோர், கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

அவர்கள் புதுவை கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மனு அளித்த போது, ஏராளமானோர் சென்றதால் பலரும் தரையில் அமர்ந்தனர். அதைத்தொடர்ந்து கல்வித்துறை தொடர்பான பாதிப்புகளை இயக்குநரிடம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மனு அளித்தவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் நடைபெற்ற மாதிரித் தேர்வில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தோல்வியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பொதுத் தேர்வில் மாணவர்கள் விதிகளை மீறி பாடப்புத்தகங்களை பார்த்து எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற செயல்களால் புதுவையின் கல்வித்தரம் பாதிக்கப்படும்.

எனவே சிபிஎஸ்இ பாட முறையை திரும்பப் பெற வேண்டும். பொதுத் தேர்வில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்வித் துறை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில், இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்வித் துறையை இழுத்து மூடி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE