சிவகங்கை: மானாமதுரையில் நான்குவழிச் சாலை நடுவே இருந்த 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருந்தது. அப்பகுதி மக்கள் தர்ம முனீஸ்வரரை காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். வாகனங்களி ல் செல்வோரும் தங்களது பயணம் பாதுகாப்பாக இருக்க இக்கோயிலில் நின்று வழிபட்டுச் செல்கின்றனர்.
இங்கு பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம செய்யப்பட்டது. அப்போது, சாலையின் நடுவே இருந்த கோயிலையும், ஆலமரத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அகற்ற முடிவு செய்தது. ஆனால், அவற்றை அகற்றுவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன.
» ‘ஆற்றைக் காணவில்லை’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள்: தருமபுரியில் பரபரப்பு
» மகாராஷ்டிரா அரசியல் நையாண்டி கலைஞர் குணால் கம்ராவுக்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன்
அதையடுத்து, கோயிலையும், ஆலமரத்தையும் அப்படியே விட்டு விட்டு, இருபுறமும் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென ஆலமரம் சாய்ந்தது. இருப்பினும், அம்மரம் கோயிலை சேதப்படுத்தாமலும், போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும் நடுவிலேயே சாய்ந்தது. பின்னர், அந்த ஆலமரத்தை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பழமையான கோயில் ஆலமரம் சாய்ந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.