சென்னை: ஏரிகளைச் சீரமைத்து வரும் சமூக ஆர்வலர் நிமல் ராகவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
தஞ்சை மாவட்டம் பேராவூ ரணியை சேர்ந்த நிமல் ராகவன். பொறியியல் பட்டதாரியான இவர் துபாயில் நல்ல ஊதியத்தில் பணி புரிந்து வந்தார். 2018-ம் ஆண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அதன்பின், கடைமடை பகுதி விவசாயிகள் ஒருங்கி ணைப்பு சங்கத்தை உருவாக்கி, 564 ஏக்கர் பரப்பளவுள்ள பேரா வூரணி ஏரியை தூர்வாரினார். இதன் காரணமாக, தற்போது அந்த ஏரிப் பாசனம் மூலம், 5,500 ஏக்கர் நெல்,கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, நிமல் ராகவன் தனது குழுவினருடன் டெல்டா மாவட்டங்களில் இதுவரை. சுமார் 205 நீர்நிலைகளை தூர்வாரி, சீரமைத்து கொடுத்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி, மகாராஷ் டிரா, குஜராத் ஆகிய மாநிலங்க ளிலும் பல ஏரிகளை தூர்வாரி சீர மைத்துள்ளார். இது தவிர, கென்யா நாட்டு கியாட்டு நகரிலும் ஏரிகளை சீரமைத்துள்ளார். இந்தியாவின் ஏரி மனிதர் என அழைக்கப்படும் நிமல் ராகவனுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல் வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச்சீரமைத்து வரும் நிமல் ராகவனுக்கு பாராட்டுகள். எடுத்துக்காட்டாக செயல்பட்டு இளைஞர்க ளுக்கு நல்வழிகாட்டும் அவருக்கு வாழ்த்துகள். நீர்நிலைகளைத் தூர் வாருதல், பராமரிப்புப் பணி களை மேற்கொள்ளுதல் என்பது நீர் மேலாண்மையில் முக்கிய மானது. தற்போது கூட தமிழக அரசின் சார்பில் 2,473 ஏரிகள், 344 அணைக் கட்டுகள், 4,879 கி.மீ வரத்துக் கால்வாய்கள் ஆகி யவற்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
» கச்சத்தீவை விட்டுக்கொடுத்து துரோகம் செய்தவர் கருணாநிதி: அண்ணாமலை கடும் விமர்சனம்
» பல்லடம் கல்லூரி மாணவி ஆணவக் கொலை; தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற முத்தரசன் கோரிக்கை
நீர்நிலைப் பகுதிகளில் குப்பை மற்றும் கழிவுகளைக் கொட்டு வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இளைஞர்களும், தன் னார்வலர்களும், சூழலியல் அமைப்புகளும் நிமல் ராகவன் போன்று தத்தமது பகுதிகளில் உள்ள நீர் நிலைகளைச் சீரமைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.