கால்நடைகள், கோழிப் பண்ணை மானியத்தில் அமைக்க வாய்ப்பு: வெளியானது அறிவிப்பு

By KU BUREAU

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கால்நடை பண்ணைகள் அமைக்க அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. தீவனம், தீவனப் பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நாட்டுக் கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய் புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணை அமைக்கவும் தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

தனி நபர், சுய உதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் விண்ணப்பிக்கலாம். https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை http://www.tnlda.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களை அணுகியு ம் விவரம் அறியலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE