சென்னை: இந்துக்களின் சொத்துகளை வக்பு வாரியம் சட்டவிரோதமாக அபகரிக்க திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் துணை போகின்றன என இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, வக்பு வாரியம் திருத்த சட்டம் குறித்து மக்களின் கருத்தைக் கேட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்ததால் மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழுவை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற கூட்டுக்குழு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.
சட்டப்பேரவையில் தீர்மானம்
இந்நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருநெல்வேலி, ராணிப்பேட்டை, சென்னை என பல பகுதிகளில் இந்துக்களின் சொத்துகளை வக்பு வாரிய சொத்து என்று எந்த ஆதாரமும் ஆவணமும் இல்லாமல் உரிமை கொண்டாடியது வக்பு வாரியம்.
» செயின் பறிப்பு குற்றவாளி என்கவுன்ட்டர்: காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு
» ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் உயிரிழப்பு தடை சட்டத்தை புதிதாக இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
தங்கள் சொத்துகளை வக்பு வாரியம் சட்டவிரோதமாக அபகரிக்க திமுக உள்பட அரசியல் கட்சிகள் துணைபோகின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.