சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், கோயிலின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு, பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சொர்க்கவாசல் பகுதி நுழைவாயில் வரும் 31-ம் தேதி வரை திறக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் 2012ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் செய்வதற் காக 2024 ஜனவரியில் பாலாலயம் செய்யப்பட்டு, கோயிலில் திருப்பணிகள் தொடங்கப் பட்டன. அதில், மூலவர் சந்நிதி, தாயார், வேணு கோபால சுவாமி, ஆண்டாள், ராமர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் ஆகிய சந்நிதிகளின் சுதை மராமத்து திருப்பணி உள்பட பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த 20ம் தேதி யாக சாலை கட்டுமானப் பணிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்நிலையில், கும்பாபிஷேக விழாவுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில் கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதில், கோயிலில் பிரதான நுழைவாயில் மற்றும் நுழைவாயில் கோபுரம் ஆகியவற்றிலும் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
எனவே, பிரதான நுழைவாயில் மூடப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கோயிலுக்கு பக்தர்கள் வருவதில் பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக, கோயிலின் சொர்க்கவாசல் பகுதியில் உள்ள நுழைவாயில் திறக்கப்பட்டு அதன் வழியாக வரும் 31-ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
» திருவாரூரில் நாய்களை கொடூரமாக கொன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பு
» ‘நீங்களா பதவி விலகுங்க, இல்லன்னா அவமரியாதையை சந்திப்பீங்க’ -இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!