திருவாரூரில் நாய்களை கொடூரமாக கொன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பு

By KU BUREAU

திருவாரூர்: இரவு நேரங்களில் நாய்களை கொடூரமாக அடித்து கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட வாசன் நகர், தென்றல் நகர், வடக்கு வீதி, தெற்கு வீதி, திருமஞ்சன வீதி போன்ற நகரின் முக்கிய வீதிகளில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வாசன் நகர் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை அடித்து கொலை செய்து ஒரு வாகனத்தில் ஏற்றிச் செல்கின்ற வீடியோ கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE