இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா; தமிழக இரும்பு மனிதர் இபிஎஸ் - ஆர்பி உதயகுமார் புகழாரம்

By KU BUREAU

சென்னை: இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் அமித்ஷா. தமிழ்நாட்டின் இரும்பு மனிதரும் இந்தியாவின் இரும்பு மனிதரும் சந்தித்துக் கொண்டனர்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து உதயகுமார் வெளியிட்டுள்ள காணொலியில், “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரண்டு மணிநேரத்துக்கு மேலாக தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன. இபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு தேசிய அளவில் கவனம் பெற்ற சந்திப்பாக மாறியுள்ளது.

ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடக்க வேண்டும் என்றும் அமித் ஷாவிடன் அவர் அமிகோரிக்கை வைத்தார்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE