உள்ளாட்சி அமைப்புகளில் 448 உறுப்பினர் பதவி காலி: மே மாதம் தேர்தல் நடத்த ஆணையம் ஏற்பாடு

By KU BUREAU

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் மற்றும் இடைக்கால தேர்தல்களை நடத்த ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உட்பட 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலி பதவியிடங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் 315 காலிப்பதவியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

இப்பதவியிடங்களுக்கு மே மாதம் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைவாக முடிக்க தொடர்புள்ள அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE