சிவகங்கை: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கூறியதாவது: மறவமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆர்பிஎஸ்கே மருந்தாளுநர், இயன்முறை சிகிச்சையாளர், பல் மருத்துவ உதவியாளர் என தலா ஒரு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல் நெற்குப்பை, சாலைக்கிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படை யில் ஐசிடிசி கவுனசிலர் தலா ஒரு பணயிடம் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்கள் எக்காரணம் கொண்டும் நிரந்தரம் செய்யப்படாது. தகுதியுள்ளோர் https://sivaganga.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இன்றுக்குள் (மார்ச் 24) செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதேபோல், காரைக்குடி செஞ்சை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட கணேசபுரம் நகர் நல வாழ்வு மையத்தில் ஒப்பந்த அடிப்படை யில் பல் நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடம் ஒன்று நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்துக்கு ஏப்.1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575 - 240524ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.