திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே பாம்பு கடித்து 12 வயது சிறுவன் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள ஏரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் ரவிக்குமார்(12). இவர், வடமதுரை அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 21-ம் தேதி ரவிக்குமார் பள்ளிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய பிறகு ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தங்கள் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, ரவிக்குமாரை பாம்பு கடித்தது. மயங்கி விழுந்த அவரை பொதுமக்கள் மீட்டு, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார், அன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.