திருவாரூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு; 10 கிராம மக்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

திருவாரூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த ஊராட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிவலம் தண்டலை, வேலங்குடி, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், அம்மையப்பன், காட்டூர், அலிவலம், இளவாங்கார்குடி, கீழகாவாதுகுடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளிகியுள்ளது. இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பேரணியாக வந்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

இந்த ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கும் விவசாயக் கூலி தொழிலாளர்களுக் கும் கிடைக்கும் சலுகைகள் பறிபோகும். ஊராட்சி யில் கிடைக்கும் சலுகைகளை பறித்து நகராட்சியாக மாற்றுவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வரிச் சுமையை அதிகப்படுத்து வதற்கு வழிவகுக்கும்.

100 நாள் வேலைத் திட்டம் பறிபோகும் சூழல் உருவாகும். ஆகவே, சம்பந்தப்பட்ட திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கூறி, கிராம மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE