தூத்துக்குடி: அண்ணா பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரியவந்தது. போலீஸார் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோன்று வி.இ.சாலையில் போக்குவரத்து போலீஸார் நடத்திய வாகன சோதனையின் போது, 15 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த இரு சம்பவங்களிலும் சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி அளித்ததாக பெற்றோரின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.