கரூர்: கரூர் மாவட்டம் அமமுக பள்ளபட்டி நகரச் செயலாளர் முபாரக் அலி, நேற்று அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பள்ளபட்டி நகரச் செயலாளர் கொளக்குடி சாதிக் பாட்ஷா, இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் கரிகாலன் ஆகியோர் தலைமையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
கரூர் மாவட்ட அதிமுக அலுவலத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் சதாசிவம், பரமத்தி கிழக்கு செயலாளர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.