திருச்சி அதிமுகவில் பரபரப்பு: மாவட்ட செயலாளர் சீனிவாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

By KU BUREAU

திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக இருந்தவர் சுரேஷ் குப்தா. இவர், திருச்சி அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன், தன்னை சாதி பெயரைச் கூறி திட்டியதாக, திருச்சி தில்லை நகர் காவல் நிலையம், தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தில்லை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து காவல் உதவி ஆணையர் தங்கப் பாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE