வெள்ளரி விலை கிலோ ரூ.200 - வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கிடுகிடு உயர்வு!

By KU BUREAU

சேலம்: வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தேவை அதிகரிப்பு காரணமாக வெள்ளரி விலை கிலோ ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது.

சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100 டிகிரியாக நீடித்து வருகிறது. இதனால், அலுவல் காரணமாக வெளியில் செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்லும் நிலை உள்ளது.

வெயில் அதிகமாக இருப்பதால் தர்பூசணி, இளநீர், மோர், கம்மங்கூழ், வெள்ளரி, பழரசம் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. இதுபோல வெப்பத்தை தணிக்க வெள்ளரி பிஞ்சுகளை மக்கள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். ஒரு கிலோ வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.120-க்கு விற்பனையான நிலையில் வெயில் தாக்கம் அதிகரிப்பதால் கிலோ ரூ.200-க்கு விற்பனையாகிறது.

அதேபோல, ரூ.40-க்கு விற்பனையான இளநீர் தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி கிலோ ரூ.25 விலையிலும், ஒரு கீத்து ரூ.20 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வெயில் தாக்கம் அதிகமாகியுள்ள நிலையில் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துகுடி உள்ளிட்ட பழங்களின் விலையும் உயர்ந்து ள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில் பழங்களின் விலை அதிகமாகி யுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE