புதுவையில் சிகிச்சையில் இறந்தவர் உடலை காரைக்கால் கொண்டு செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி: முதல்வர்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுவையில் சிகிச்சையில் இறந்தவர் உடலை காரைக்கால் கொண்டு செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் பூஜ்யநேரத்தில் என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திரபிரியங்கா இன்று பேசுகையில், "காரைக்கால் மாவட்ட நோயாளிகள் பலர் புதுவை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சையின்போது காரைக்காலை சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடலை காரைக்காலுக்கு மீண்டும் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது. எனவே அவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும்." என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, "காரைக்காலை சேர்ந்தவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தால், அவர்களின் உடலை காரைக்கால் கொண்டுசெல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி செய்துதரப்படும்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE