சென்னை: அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற மார்ச்.21ம் தேதி வெள்ளிக் கிழமை சென்னையில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆண்டு தோறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா அவர்களின் வழியில் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருகின்ற மார்ச் 21ம் தேதி, வெள்ளிக் கிழமை மாலை கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னை, எழும்பூர், புஹாரி சிராஸ் ஹாலில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.