செங்கோட்டையனிடம் போய் கேளுங்கள்... செய்தியாளர்கள் கேள்விக்கு சூடான எடப்பாடி பழனிசாமி!

By KU BUREAU

சென்னை: செங்கோட்டையன் உங்களை சந்திப்பதை தவிர்ப்பது ஏன் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்று சூடான அவர், “ஏன் தவிர்த்தார் என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள். அவரிடம் கேட்டால்தானே காரணம் தெரியும்” என்றார்

2025-26-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, செங்கோட்டையன் உங்களை சந்திப்பதை தவிர்ப்பது ஏன் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்று சூடான எடப்பாடி பழனிசாமி, “ஏன் தவிர்த்தார் என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள். அவரிடம் கேட்டால்தானே காரணம் தெரியும். என்னை சந்திக்காதது ஏன் என்று அவரிடமே கேளுங்கள். என்னிடம் கேட்டால் எப்படி தெரியும். இதெல்லாம் இங்கே கேட்கும் கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் உள்ள பிரச்சினைகளை இங்கே பேசாதீர்கள். இங்கே நிறைய பேர் வரவில்லை, அதெல்லாம் ஏன் கேட்கவில்லை. மொத்தம் 62 பேர் உள்ளோம். அவரவருக்கு வேலையிருக்கும்.

அதிமுக சுதந்திரமாக செயல்படக் கூடிய கட்சி. திமுகவை போல் அடிமை ஆட்கள் இங்கு கிடையாது.எங்கு செல்லும்போதும், நான் என்றும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் சாதாரண தொண்டன். நான் தலைவன் கிடையாது.. அதேபோல் திமுக போல் வாரிசு அரசியலோ, குடும்ப கட்சியோ கிடையாது. இது ஒன்றும் சர்வாதிகார கட்சி அல்ல. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும்தான். எங்கள் கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட எந்த தடையும் கிடையாது. வேறு கட்சியிலும் இந்த சுதந்திரம் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்து பணியாற்றியவர்கள்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE