திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் உள்ள நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பசுமை விருதை, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் உள்ள நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் மரம் வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கவும், பள்ளியில் பசுமையை மேம்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு மாணவர்கள் பராமரித்து வருகின்றனர். தற்போது பள்ளி வளாகம் முழுவதும் பசுமையாக காணப்படுகிறது.
இப்பள்ளி, தமிழக அரசு சார்பில் பசுமை விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டது. நேற்று சென்னையில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் வில்பன் பொன்ராஜிடம் பசுமை விருதை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.