கணவரை இழந்த, வேலையற்ற ஆதிதிராவிட, பழங்குடியின பெண்களுக்கு மாதம் ரூ.3,000: பட்ஜெட் அறிவிப்பு

By KU BUREAU

புதுச்சேரி: பட்ஜெட்டில். மேலும் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்கள் வருமாறு: புதுவை சோலைநகர் புறக்காவல் நிலையம் காவல் நிலையமாக தரம் உயர்த்தப்படும். பத்துக்கண்ணு பகுதியில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்.

போலீஸாருக்கு காலத்தோடு பதவி உயர்வு அளிக்கப்படும். சிறையில் கைதிகளின் தகவல்கள் கணிணிமயமாக்கப்படும். ஏழை சிறை கைதிகள் நலத்திட்டம் உருவாக்கப்பட்டு, சட்ட உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். தீயணைப்பு உபகரணங்கள் வாங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் மறு நில அளவை ட்ரோன் சர்வே நடத்தப்படும். அனைத்து வியாபார இடங்களிலும் துணிப்பை வழங்கும் இயந்திரம் அமைக்கப்படும். பொங்கல் சுற்றுலா பொருட்காட்சி புதுவையில் பிரம்மாண்டமாக நடத்தப்படும். விமான நிலைய ஓடுதளத்தை விரிவுபடுத்த நிலம் கையகப்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு சிறப்புக்கூறு நிதியாக ரூ.526 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதை கடந்த திருமணம் ஆகாத, கணவரை இழந்த, வேலையற்ற ஆதிதிராவிட, பழங்குடியின பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். தாய், தந்தை இழந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு 18 வயது முடியும் வரை மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிக்கு மாதம் ரூ.500, கணினி பயிற்சிக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் இறந்தால் உறவினர்களுக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரம் நிதி, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மாநில விருதுக்கான ரொக்கப்பரிசு ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ.10 ஆயிரம் உயர்த்தப்படும். மாற்று;jதிறனாளி மாணவர்களுக்கு 5-ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1,000, 5 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரம், 8 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரத்து 400 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை முறையே ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரத்து 400 ஆக உயர்த்தப்படும். இளங்கலை மாணவர்களுக்கு ரூ.8 ஆயிரம், முதுகலை மாணவர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 800 உதவித்தொகை வழங்கப்படும். வில்லியனுார், காமராஜர் நகரில் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE