கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் பிரின்சி (17) . இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இவர் நண்பர்களுடன் நேற்று புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தார்.
அப்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், அலையில் சிக்கிய அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சோபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீபன்ராஜ், திவாகர் ஆகியோரை மாணவியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
சாலை மறியல்: இதனை கண்டித்து ஆலப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.
» அதிமுக கூட்டணிக்கு பச்சை கொடி: ராஜ்யசபா சீட் குறித்து பாசிட்டிவாக பேசிய ராமதாஸ்!
» ரூபாயின் ₹ குறியீட்டை வடிவமைத்தது ஒரு தமிழர் என்பது தெரியுமா? - முதல்வரை விமர்சித்த அண்ணாமலை!