தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு: திருப்பூர் ஆட்சியரிடம் இளைஞர் புகார்

By KU BUREAU

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜிடம், ஈரோடு மாவட்டம் நம்பியூர் பில்லியம்பாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளி லோகநாதன் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மனைவி ரம்யா (28). அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சோ்க்கப்பட்ட என் மனைவிக்கு, நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் எனது மனைவி ரம்யா இறந்துவிட்டார்.

ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் அவா் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவா் இறப்புக்கு தவறான சிகிச்சையே காரணம். எனது மனைவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனது குழந்தையின் எதிர்காலம் கருதி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE