சென்னை: 2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட்டில், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றப்படுகிறது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன் என்பது தெரியுமா? ஏன் இவ்வளவு முட்டாள்தனமாக உள்ளீர்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்
தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ரூபாய்க்கான குறியீடான ₹ பதில் தமிழ் எழுத்தான 'ரூ' எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, ‘2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட்டில், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் சின்னத்தை மாற்றப்படுகிறது. இந்த ₹ குறியீடு முழு இந்தியாவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நமது நாணயத்தில் இணைக்கப்பட்டது.
இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன் என்பது தெரியுமா? ஏன் இவ்வளவு முட்டாள்தனமாக உள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்
» இபிஎஸ்சுக்கு இந்தி எது, இங்கிலீஸ் எது, தமிழ் எதுன்னே தெரியாது - மா.சுப்பிரமணியன் கிண்டல்