பாம்பன் கல்லூரியில் மகளிர் தின விழா; போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிக்கா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது.

ராமேசுவரம் அருகே பாம்பனில் அன்னை ஸ்கொலஸ்டிகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ஆனிபெர்பெட் சோபி தலைமை வகித்தார். நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ஜான்போஸ், செயலாளர் பாண்டி, ரிலையன்ஸ் பவுண்டேசன் மேலாளர் சுருதி கிரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நுகர்வோர் பாதுகாப்பு நலனில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் ஜான் போஸ், வளரும் சமூகத்தில் பெண்களின் பங்கும் பாதுகாப்பும் குறித்து சுருதி கிரண், மாவட்ட திட்ட மேலாளர் ஸ்ரீ கிருபா ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தற்காப்பு கலை உத்திகளும் நிகழ்த்தப்பட்டது.

மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE