கோவை: தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமங்களுக்கு நேரடியாக சென்று விழப்புணர்வு ஏற்படுத்த 40 களப்பணியாளர்களக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதன்கிழமை (மார்ச்.12) பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுகிறது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம். இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. பல்வேறு நல உதவிப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. அரசு திட்டங்கள் குறித்து கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த களப்பணியாளர்களுக்கு புதன்கிழமை (மார்ச்.12) பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் கூறியதாவது: தமிழக அரசு, உலக வங்கி நிதியுதவி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 40 களப்பணியாளர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.
» ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தல்: சென்னையில் இளைஞர் கைது
» 1-9 வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையில் ‘2024’ என இருந்ததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி!
நேரடியாக சென்றவுடன் அடையாள அட்டை கேட்பது போன்ற நடவடிக்கைளை தவிர்த்து மாற்றுத்திறனாளிகளிடம் நட்பு முறையில் கனிவமாக பேசுவதில் தொடங்கி அவர்களின் ‘கேஸ்’ வரலாறு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிவது. அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் கடும் மன உளைச்சலில் இருப்பார்கள். அதே போல் குடும்ப சூழல் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனவே குடும்ப உறுப்பினர் போல் பழக களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவர்கள் களத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பது குறித்து கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.