அவிநாசி அருகே பிரசவத்தின்போது பெண் மரணம் - ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

By KU BUREAU

அவிநாசி: அவிநாசி அருகே ஈஸ்வரன் கோயில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (29). பனியன் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (28). இவர்களுக்கு சிவஸ்ரீ (8) என்ற மகள் உள்ளார். மீண்டும் கர்ப்பமடைந்த ரம்யா பிரசவத்துக்காக துலுக்கமுத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில், ரம்யா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரம்யாவின் உயிரிழப்புக்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனக் கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அவிநாசி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE