பேருந்துகளில் இலவச பயணம்: போலீஸாருக்கான நவீன அடையாள அட்டை திட்டத்தை தொடங்கிவைத்த காவல் ஆணையர்

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் கைதிகளை வழிக்​காவலுக்கு அழைத்​துச் செல்​லும் போலீ​ஸார், அரசு பேருந்​துகளில் பயணச் சீட்டு (டிக்​கெட்) பெற வேண்​டிய அவசி​யம் இல்​லை. அதற்​கானவாரன்ட் இருந்​தாலே போது​மானது. இதே​போல், பணி நிமித்​த​மாக செல்​லும் போலீ​ஸாரும் அரசு பேருந்​துளில் பெரும்​பாலும் டிக்​கெட் எடுப்​பது இல்​லை. ஆனால், சில நேரங்​களில் நடத்​துநர்​கள் கண்​டிப்பு காட்டி டிக்​கெட் எடுக்க வலி​யுறுத்​து​வார்​கள். இதனால், இரு தரப்​பினரிடையே அவ்​வப்​போது பிரச்​சினை ஏற்​பட்​டது.

இந்த பிரச்​சினைக்கு தீர்வு காணும் வகை​யில், காவலர் முதல் ஆய்​வாளர் வரை அடை​யாள அட்​டைகளை காண்​பித்து பேருந்​துகளில் தாங்​கள் பணி செய்​யும் மாவட்​டத்​துக்​குள் பயணம் செய்​ய​லாம். இதற்​காக நவீன அடை​யாள அட்டை வழங்​கப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​திருந்​தார்.

அதன்​படி, சென்னை பெருநகர காவல் துறை​யில் பணிபுரி​யும் போலீ​ஸாருக்கு அரசு பேருந்​துகளில் இலவச பயணம் மேற்​கொள்​ளும் வகை​யில் நவீன அடை​யாள அட்​டைகள் தயார் செய்​யப்​பட்​டன.

அடை​யாள அட்டை வழங்​கும் நிகழ்ச்சி வேப்​பேரி​யில் உள்ள சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. காவல் ஆணை​யர் அருண், சென்னை மாநகர போக்​கு​வரத்து கழக மேலாண் இயக்​குநர் பிரபுசங்​கர் முன்​னிலை​யில் நவீன அடை​யாள அட்​டைகளை 10 போலீ​ஸாருக்கு வழங்​கி, இத்​திட்​டத்தை தொடங்கி வைத்​தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE