தருமபுரி பரிதாபம்: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

By KU BUREAU

தருமபுரி: பாலக்கோடு அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கூட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் (31). இவர் மனைவி ஆனந்தி. இந்த தம்பதிக்கு 5 மற்றும் 2 வயதுடைய 2 பெண் குழந்தைகள். நேற்று முன்தினம் 2 வயதுடைய குழந்தை ஹர்னிகா-வை சோமனஅள்ளியில் உள்ள தாய் வீட்டில் விட்டுவிட்டு ஆனந்தி வேலைக்கு சென்றார்.

பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. சற்று தாமதமாக இதையறிந்த உறவினர்கள் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலக்கோடு போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE