தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை, சூரியசக்தி நிறுவு திறன் அதிகரிப்பு

By KU BUREAU

தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.

சூரியசக்தி மின்உற்பத்திக்கு சூரிய வெப்பத்தைவிட வெளிச்சம் அவசியம். தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருப்பதால், காற்றாலை மின்நிலையம் அமைப்பதற்கான சாதகமான சூழல் உள்ளது. இதனால், பெரிய நிறுவனங்கள் அப்பகுதிகளில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்கின்றன.

காற்றாலை, சூரியசக்தி நிறுவு திறன் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20-ல் இருந்து 2022-23 வரை பல பிரிவுகளிலும் நிறுவு திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, காற்றாலை நிறுவு திறன் 55 மெகாவாட்டில் இருந்து 124 மெகாவாட்டாகவும், மேற்கூரை சூரியசக்தி திறன் 44 மெகாவாட்டில் இருந்து 101 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது. 1,276 மெகாவாட்டாக இருந்த சூரியசக்தி நிறுவு திறன் 1,192 மெகாவாட்டாக உள்ளது.

கடந்த 2023-24-ம் ஆண்டில் மட்டும் 278 மெகாவாட் காற்றாலை, 1,281 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE