லைட்டர், உதிரி பாகங்களை தடை செய்ய வேண்டும்: முதல்வரிடம் துரை வைகோ கோரிக்கை

By KU BUREAU

சென்னை: சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலை​மையகத்​தில் முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லினை மதி​முக முதன்மைச் செயலர் துரை வைகோ எம்​.பி. நேற்று முன்​தினம் மாலை சந்​தித்து பேசி​னார். அப்​போது, தனது கோரிக்​கையை ஏற்று மக்​காச்​சோளத்​துக்கு விதிக்​கப்​பட்ட 1 சதவீத செஸ் வரியை ரத்து செய்​ததற்கு பொன்​னாடை போர்த்தி முதல்​வருக்கு நன்றி தெரி​வித்​தார். தொடர்ந்​து, சில கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை​யும் அவர் அளித்​தார்.

மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:கோவில்​பட்​டி, சாத்​தூர், சிவ​காசி, விருதுநகர் உள்​ளிட்ட பகு​தி​வாழ் மக்​களின் வாழ்​வா​தா​ர​மாக விளங்​கும் தீப்​பெட்டி தொழிலை நலிவடையச் செய்யும் லைட்​டர்​கள் மற்​றும் அதன் உதிரி பாகங்​களை தயாரிப்​ப​தற்​கும், விற்​பனை செய்​வதற்​கும் தடை விதிக்க வேண்​டும்.

தென்​காசி மாவட்​டம் குருவிக்​குளம் ஒன்​றி​யத்​துக்கு உட்​பட்ட 12 ஊராட்​சிகளை இளை​யரசனேந்​தலை தலை​மை​யிட​மாக கொண்டு தனி ஒன்​றிய​மாகவோ, கோ​வில்​பட்டி ஒன்​றி​யத்​துடனோ இணைத்து தூத்​துக்​குடி மாவட்ட நிர்​வாகத்​தின் கீழ் கொண்டு வர வேண்​டும்.

ஐயா வைகுண்​டர் பிறந்​த​நாளை அரசு விடு​முறையாக அறி​வித்​து, மதுக்​கடைகளை மூட உத்​தர​விட வேண்​டும். மாமன்​னர் திரு​மலை நாயக்கருக்கு கோவில்​பட்​டி​யில்​ சிலை அமைக்​க வேண்​டும்​. இவ்​​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE