திருநெல்வேலி: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து சீராக இருப்பதால், நேற்று முதல் அருவிக்கு சூழல் சுற்றுலா வரும் மக்களுக்கு அருவியில் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், புலிகள் காப்பகம் அம்பா சமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரக கட்டுப்பாட்டில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா செல்லும் பொதுமக்களிடம் பெரியவர்களுக்கு சரணாலய நுழைவுக் கட்டணம் ரூ.30 வசூல் செய்து வரப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் அறிவிக்கை யின்படி இந்த நுழைவுக் கட்டணம் ரூ.20 ஆக தற்போது வசூல் செய்யப்படுகிறது. இதர கட்டண விவரங்கள் விரிவான அரசு ஆணைகள் கிடைக்கப் பெற்றவுடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.