கொளுத்தும் வெயில் - பழநி மலைக்கோயிலில் நிழற்பந்தல் அமைக்கப்படுமா? - பக்தர்கள் தவிப்பு

By KU BUREAU

திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க வெளிப் பிரகாரத்தில் நிழற்பந்தல், கால்களில் சூடு ஏறாமல் இருக்க ‘கூலிங் பெயின்ட்’ அடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் வருகின்றனர். கோடை காலம் தொடங்கும் முன்னரே, பழநியில் வெயில் வாட்டி வருகிறது. பழநி மலைக் கோயிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மற்றும் வெளி பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்கள் வெயில் காரணமாக சிரமப் படுகின்றனர்.

பக்தர்களை வெயிலில் இருந்து காக்கவும், நிழலில் இளைப்பாற வசதியாக மலைக்கோயிலில் நிழற்பந்தல் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், தரிசனம் முடிந்து வெளி பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்களுக்கு பாதத்தில் சூடு ஏறாமல் இருக்க, தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது.

இது போதுமானதாக இல்லை. வரும் நாட்களில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும். எனவே, பக்தர்களின் பாதங்களை பாதுகாக்காக, வெளி பிரகாரத்தை சுற்றிலும் ‘கூலிங் பெயின்ட்’ அடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE