சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள் இதில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப் பட்டது. இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது.
இதனையடுத்து சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார். இஸ்லாமியர்களை போல தலையில் வெள்ளை தொப்பி, வெள்ளை சட்டை, கைலி அணிந்த படி ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி வந்த விஜயை இஸ்லாமியர்கள் அழைத்துச் சென்றனர். இந்த 2,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நோன்பு திறக்க உள்ளனர்.
அவர்களுடன் சேர்ந்து தவெக தலைவர் விஜய்யும் நோன்பு திறக்கவுள்ளார். பின்பு மக்ஃரிப் பாங்கு சரியாக 6:28 மணி அளவில் நடைபெற உள்ளது. மக்ஃரிப் தொழுகை 6.35 மணிக்கும், இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இஃப்தார் விருந்து பரிமாறப்பட்ட உள்ளது.
» பாஜக கூட்டணிக்காக இப்போது தவமிருக்கிறது அதிமுக: அண்ணாமலை விளாசல்
» தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு