தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

By KU BUREAU

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் நிலையில் பதவி வகித்து வரும் 17 பேரை பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை துறை தனி வட்டாட்சியர் ஜி.சிவக்குமார், தஞ்சாவூர் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய பி.அருள்ராஜ் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப் பட்டுள்ளனர்.

பாபநாசம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் கே.முருககுமார், திருவையாறு வட்டாட்சியராக மாற்றப் பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட மாநில நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர் எஸ்.யுவராஜ், ஒரத்தநாடு வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய டி.எஸ்.சுந்தரசெல்வி பூதலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஏ.மங்கையர்கரசி, பூதலூர் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய மரியஜோசப் கும்பகோணம் ஆதிதிரவிடர் நல தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஆர்.சாந்தமீனா திருவிமடைருதூர் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய பாக்கியராஜ் கும்பகோணம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன், பேராவூரணி வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய தெய்வாணை பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தர்மேந்திரா, பட்டுக்கோட்டை வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய சுகுமார் பேராவூரணி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர் பழனிவேலு, பாபநாசம் வட்டாட்சியராகவும், அங்கு பணியாற்றிய செந்தில்குமார் பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவம் மாற்றப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி திருவோணம் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எம்.எம்.கார்த்திகேயன் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக பறக்கும்படை தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE