பள்ளிகளுக்கு செல்லாத மாணவர்கள்; வீடுகளுக்கு நேரில் சென்று பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர்

By KU BUREAU

திருநெல்வேலி: ராதாபுரம் வட்டாரத்தில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 9-வது வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர்களுடன், மாவட்ட ஆட்சியர் சுகுமார் பேசினார். ராதாபுரம் வட்டாரத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார். நக்கனேரி கிராமத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிக்கு நீண்ட நாள் செல்லாத 9ம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் பெற்றோர்களிடம் பேசினார். தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் உறுதி அளித்தனர். தொடர்ந்து, நக்கனேரி, சமூகரெங்கபுரம் அங்கன்வாடி மையங்கள் மற்றும் திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

ராதாபுரம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜான்சன் ஜெபகுமார் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE