சென்னை: இன்று தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் உணவளிக்க கூடிய திட்டம் சாத்தியமானதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். அவரை அப்பா என்று அழைத்தால் என்ன தவறு என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தரங்கில் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, “நான் பல முதலமைச்சர்களிடம் காலை உணவு திட்டத்தை கொண்டுவாருங்கள் என மனு கொடுத்துள்ளேன். எல்லாரும் இது சாத்தியமில்லை, நிதிப் பற்றாக்குறை உள்ளது என சொன்னார்கள்.
ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலையிலும் உணவளிக்க கூடிய திட்டம் சாத்தியமானதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். அவரை அப்பா என்று அழைத்தால் என்ன தவறு.ஏன் சில பேருக்கு அந்த வார்த்தையை கேட்டால் கசப்பாக இருக்கிறது. நீ சொல்லவேண்டாம், உன் பிள்ளைகள், பேரன்கள் சொல்வார்கள், அவரை ‘அப்பா’ என்று. கடவுளை 1008 பெயர்களை வைத்து அழைக்கிறோம். தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்” என்று கூறினார்