கவிஞர் நந்தலாலா காலமானார்: தலைவர்கள், தமுஎகச இரங்கல்!

By KU BUREAU

சென்னை: கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

பெங்களூரு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட நந்தலாலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நந்தலாலா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தார். அவரது மறைவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொடிருக்கிறேன். தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக, சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்ந்தது.

பூவிரியும் காவிரியின் புன்சிரிப்பை, அடர்த்தியும் அழகும் கொண்ட தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், எழுத்தாளர்களும் நந்தலாலா மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE