திருவள்ளூரில் தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு ஆய்வு: திருத்தணி கோயிலுக்கு யானை வழங்க பரிசீலனை

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தலைமையிலான சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகளுடன் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு யானை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, திருத்தணியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்த குழுவினர், கட்டுமான பணியில் பயன்படுத்தும் செங்கற்கள் தரமற்றதாக இருப்பதை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தரமான செங்கற்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்தவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். பின்பு, அக்குழுவினர் கனகம்மா சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE