மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்க வேண்டும்: சமஸ்கிருத பாரதி நிர்வாகி கருத்து

By KU BUREAU

கோவை: சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளர் அனந்த கல்யாண கிருஷ்ணன் கூறியதாவது: தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி குறித்து தமிழ்நாட்டில் பல தரப்பிலும் விவாதங்கள் நடை பெற்றுவருகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியில் பக்தி சார்ந்த நட வடிக்கைகள் மற்றும் சித்தர்கள் எழுதிய பாடல்களில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமும் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியில் 30 சதவீதம் சமஸ்கிருத வார்த்தைகள் கலந்துள்ளன. இருப்பினும் அதனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி பாட திட்டம் மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அமல் படுத்தப்படும்போது, பலர் இந்தி மொழியை மூன்றாவது மொழியாக கற்க வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை தேர்வு செய்ய மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும்.

இதனால் ராமாயணம். பகவத் கீதை போன்றவற்றை அதன் உண்மை வடிவத்தில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். உண்மையில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் தான் தமிழ் மொழி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தமிழ் மொழி கற்பதற்கு சிரமப்படுகின்றனர். பல வீடுகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டும் கலந்து பேசப்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர் தங்களின் குழந்தை கள் தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக்கொள்ளவும். மூன்றாவது மொழியாக சம்ஸ் கிருதத்தை கற்கவும் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE