21வது ஆண்டாக ரமலான் நோன்பு இருக்கும் திருமாவளவன்: இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பு!

By KU BUREAU

சென்னை: 21வது ஆண்டாக வழக்கம் போல ஐந்து நாட்கள் ரமலான் நோன்பு இன்று முதல் மேற்கொள்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”இன்று முதல் நாள் ரமலான் நோன்பு! இவ்வாண்டு (2025) 21வது ஆண்டாக வழக்கம் போல ஐந்து நாட்கள் ரமலான் நோன்பு இன்று முதல் மேற்கொள்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இசுலாமிய சான்றோர்களான உலமாக்களுடன் இன்று அதிகாலை சென்னை அபு பேலஸ் விடுதியில் நடைபெற்ற சகர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

இன்று மாலை மதுரையில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவையின் சார்பில் இந்நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது” என்று பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE